ஏமன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏமனில் உள்ள பாதிரியாரின் தொண்டு இல்லத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் பாதிரியாரை கடத்தியிருந்தனர். கேரளாவினைச் சேர்ந்த தோமஸ் உலுன்நளில் என்ற குறித்த பாதிரியாhர் ஏமன் நாட்டில் ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தொண்டு நிறுவனத்துக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 4 தாதிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர் . அத்துடன் தீவிரவாதிகள் பாதிரியார் தோமஸ் உலுன்நளிலை கடத்திச்சென்றிருந்தனர். கடந்த ஒரு வருடமாக அவர் பற்றிய தகவல்கள் எவையும் தெரியாது இருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோமஸ் உலுன்நளில் விடுவிக்கப்பட்ட தகவலை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.