161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் எ ஜெயசிங்க கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் எ ஜெயசிங்க மன்றில் முற்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் எ ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அதனை அடுத்து மூன்று லட்சம் ரூபாய் காசு பிணை, மற்றும் தலா 4லட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அத்துடன் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்படவேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை, மாதத்தின் முதல் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையப்பம் இடவேண்டும். என நிபந்தனைகள் மன்றினால் விதிக்கப்பட்டது.
அதேவேளை இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரான யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக மன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Spread the love