ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடையை மீறி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், பாய் தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர் அதேபோன்று விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்