குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்கள் வெளியாவதாக பிரானஸ் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் இணை அமைச்சருமான பெஞ்சமின் கிரீவொக்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மேலும் தெளிவான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரான்ஸ் அமைச்சர் இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் ஐரோப்பா முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளதுடன் பிரித்தானியாவே மோசமான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது நீடிக்கும் நிச்சயமற்ற நிலை வர்த்தகத்திற்கு உகந்தது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பிரித்தானியாவை தண்டிக்கும் விடயமல்ல என தெரிவித்த பிரான்ஸ் அமைச்சர் நாங்கள் மக்களின் ஆணையை மதிக்கவேண்டும் எனவும் அதுவே ஜனநாயக ஐரோப்பாவின் அடிப்படை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேலும் தெளிவு அவசியம் எனவும் ஓரு தரப்பி;ன் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.