184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத வழிபாட்டு பாடசாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலாலம்பூரில் உள்ள தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் உள்ள மத வழிபாட்டு பாடசாலையிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தின் காரணமாக பாடசாலை விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
Spread the love