Home இலங்கைமீன்பிடித் துறைமுகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன – ஜே.வி.பி.

மீன்பிடித் துறைமுகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன – ஜே.வி.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மீன்பிடித் துறைமுகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடித் துறைமுகங்களை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடுகளை செய்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் காணிகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீடுகளின் பின்னர் மீன்பிடித் துறைமுகங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More