Home இலங்கை ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துமாறு இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் -HRW

ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துமாறு இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் -HRW

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டுமென இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் இது குறித்து அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

குறித்த கால எல்லைக்குள் இலங்கை சில பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. காலமாறு நீதிப் பொறிமுறைமை குறித்து இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

நல்லிணக்கம் தொடர்பிலான அலுவலகங்கள் அமைத்தல் அது குறித்து பேசுதல் உள்ளிட்ட விடயங்களைத் தவிர இலங்கையில் 2015 தீர்மானங்கள் கிரமமான இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More