167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவின் மங்களுருவிற்கு சென்றிருந்த இலங்கைக் கப்பல் ஒன்றில் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கொள்கலன் ஒன்றில் எட்டு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன்னதாக இந்த கப்பல் மங்களுருவை சென்றடைந்துள்ளது எனவும் இந்தக் கப்பல் கொழும்பில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கஞ்சா போதைப் பொருளை யார் கடத்தி வந்தார்கள், எங்கு விநியோகம் செய்யப்படவிருந்தது என்பது பற்றிய விபரங்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love