குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டில் தேர்தலை நடத்த வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம், அரசாங்கம் கோரியுள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தலை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினர்கள் 2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் பெண்களுக்கான நலன் திட்டங்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.