குட்கா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய கடிதத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதால் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவை உரிமைக் குழு கடிதம் அனுப்பியிருந்தது. இது தொடர்பில் தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு ஏற்கனவே ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்றையதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது