வடமேல் மாகாண சபையின் நிதி, திட்டமிடல், பொறியியல் சேவைகள், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, சூழல் விவகாரங்கள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி, வர்த்தகம், காணி, மின்சக்தி, சக்திவலு, விளையாட்டுத்துறை, கலாசாரம், கலைகள், இளைஞர் விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பியசிறி ராமநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நிமன கடிதங்களை பெற்றுள்ளனர்.
Spread the love
Add Comment