குளோபல் தமிழச் செய்தியாளர்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு விழா குழுவினால் பல்கலைகழக வளாகத்தினுள் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளான.
யாழ்.பல்கலைகழகத்தினுள் திலீபனின் திருவுருவபடம் வைத்து உண்ணா நோன்பிருந்து திலீபன் உயிர் நீத்த 26ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்த மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதே கால பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு தினமும் கைலாசபதி கலையரங்கில் திரைப்படங்கள் காட்சி படுத்தப்படவுள்ளன.
அதேவேளை இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் பருத்துத்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேநேரம் நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள இடத்தில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.