குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்கத் தயார் என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆணைக்குழு முன்னிலையிலும் விளக்கம் அளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோப் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் இந்த பிணை முறி விவகாரம் தொடர்பில் தாம் ஆராய்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு பிணை முறிகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து ஆராய்ந்ததாகத் தெரிவித்துள்ளார். உண்மையான நிலைமைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு தம்மை அழைக்காமை ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.