164
தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக நோபால் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், கடத்தப்படுத்தப்படுவதற்கும் எதிராக அமைதிக்கான நோபால் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குழுவினரின் நடத்தும் ரத யாத்திரை திண்டுக்கல்லை சென்றடைந்தது.
இதன்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய கைலாஷ் சத்யார்த்தி, தேசிய ஆவண காப்பக புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் 2 லட்சத்து 15,212 பெண்கள் திருமண வயது வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளதாக தெரிவித்தார்.இதேபோன்று ஒரு லட்சத்து 64,763 ஆண்களும் குழந்தை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்த அவர், 2013 முதல் 2015ம் ஆண்டு வரை சுமார் 10,586 குழந்தைகள் காணாமல் போனதாக தெரிவித்தார்.
Spread the love