வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முதலில் நிறுத்த வேண்டியது வடக்கு முதல்வரையேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் சாதாரண மக்களின் வாக்குகளில் முதலமைச்சராகிய விக்னேஸ்வரன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை நிராகரித்து, ஜனநாயகத்தை நேசித்த மக்களின் வாக்குகளில் முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன், அவ்வாறான ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட நாட்டின் சட்டத்தில் இடமில்லை எனவும், இனங்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்யுமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.