அரசாங்கம் மாறினாலும், அரசியல் கலாசாரம் சிறு அளவில் கூட மாற்றம் பெறவில்லை எனவும், கடந்த அரசாங்கம் எந்தவித தயவுதாட்சனியமும் இன்றி உயிர்களை பறித்தாகவும், அரச சொத்துக்களை கொள்ளையிட்டதாகவும் பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் எழுதப்பட்ட நூல் நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த கால அரசாங்கத்தைப் போலவே பேராசை பிடித்தவர்களே நாட்டில் ஆட்சி நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் மக்கள் தரப்பில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், தனது கைகளில் தலைமை பதவியை வைத்துக் கொள்ள, அந்த மக்களிடையே இருந்த ஏனைய தலைவர்களை கொலை செய்ததனால் இன்று தமிழ் மக்களிடையே தலைமைத்துவம் இல்லாத நிலை உருவாகி உள்ளதாகவும் விக்டர் ஐவன் சுட்டிக்காட்டி உள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரபாகரன் இறந்தவுடன் தமிழ் மக்கள் தலைவன் அற்ற பாலைவனமாகத்திற்கு தள்ளப்பட்டது போன்றதொரு நிலை ஏற்பட்டது எனவும் இன்று சிங்களவர்களுக்கும், முஸ்லிகளுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.