எதிர்கால தேர்தல்கள் அனைத்தும் கலப்பு முறையில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அனைத்தும் கலப்பு முறையில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த விடயம் பற்றி கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
விகிதாசார முறையில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் சில தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்ய ஒரு உறுப்பினர் கூட இருப்பதில்லை என தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு அடிப்படையிலான முறையில் இந்த குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 60 வீதம் தொகுதிவாரி அடிப்படையிலும், 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.