181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக நிபந்தனையின்றி அனைத்து தரப்பினரும் இணைந்து போராட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற அச்சத்தினால் தேர்தலை நடத்த தயங்குகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக விரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love