உலகம் முழுவதும் 81.5 கோடி பேர் பசியால் தவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் எனவும் இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆபிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளமையானது பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.