குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரதமர் திரேசா மே கனடாவிற்கு பயணம் செய்துள்ளார். பிரெக்சிற்றின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில், இந்த பயணம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பிலான சர்ச்சை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீடா போன்றதொரு பொருளாதார உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு கனடாவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக திரேசா மே தெரிவித்துள்ளார். திரேசா மே, கனேடிய பிரதமர் Justin Trudeau ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கனடாவிற்கான தமது பயணம கடந்த காலத்தை பாராட்டுவதற்கானது மட்டுமல்ல எதிர்காலத்தை பலப்படுத்திக்கொள்வதற்குமானது என திரேசா மே தெரிவித்துள்ளார்.