Home இலங்கைகுற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வெறுமனே வடக்கு கிழக்கைச்  சேர்ந்தவர்களுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை எனவும், தெற்கு மக்களும் அதன் ஊடாக நன்மை அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என மனச்சாட்சியின் பிரகாரம் தெரிந்த படையினர் நீதி விசாரணைகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்களது அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More