145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி பலவந்த காணாமல் போதல்கள் குறித்த விவாதம் பாராளுமன்றில் நடத்தப்படவிருந்தது. எனினும், குறித்த திகதியில் இந்த பாராளுமன்ற விவாதம் நடத்தப்படாது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 20ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தையும் நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love