மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இன்று பிணைமுறி மோசடிகள் சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார்.
அர்ஜுன் மஹேந்திரனிடம் விசாரணை செய்வதற்கு கடந்த 13ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில், இன்று ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அர்ஜுன் மஹேந்திரனின் வாக்குமூலம் கட்டாயமானது என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை அர்ஜூன மகேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளிலும், குறிப்பிடத்தக்க சில தகவல்கள் காணாமல் போயுள்ளதாக, பிணை முறி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.