குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல மாதங்களாக நீடிக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத ஓரு நிலையில் கட்சிக்குள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இந்த வாரம் பேச்சுவார்த்தைகளிற்கு புத்துயுர் கொடுப்பதற்கும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்குமான முயற்சிகளை மேற்கொள்வார்
வெள்ளிக்கிழமை இத்தாலிய நகரான புளோரன்சில் ஆற்றவுள்ள உரையில் ஐரோப்பிய ஓன்றியத்துடனான எதிர்கால உறவுகளிற்கான தனது திட்டத்தை அவர் முன்வைப்பார். பிரித்தானியாவின் 60 வயது தலைவர் திட்டமிட்டு அந்த நகரத்தை உரையாற்றுவதற்காக தெரிவு செய்துள்ளார்.அதன் மூலம் ஐரோப்பிய ஓன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்களுடனும் நேரடியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும் என அவர் எதிர்பார்க்கின்றார்
கடந்த யூன் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி தனது பெரும்பான்மையை இழந்த பின்னர் தெரேசா மே பெருமளவிற்கு அமைதியாகவே காணப்படுகின்றார். பிரித்தானிய ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து 2019இல் வெளியேறிய பின்னரும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கான ஆழமான விசேட ஆதரவு தொடரும் என மாத்திரம் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களிற்கு முன்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ்ஜோன்சன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த தனது சொந்த திட்டத்தை முன்வைத்துள்ளார். இதன் மூலம் கட்சிக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் முரண்பாடுகள் காணப்படுவதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்
மே இந்த விடயத்தில் தனது கட்சி;க்குள் காணப்படும் கடும்போக்கு கொன்சவேர்ட்டிவ்களையும் பிரித்தானிய ஐரோப்பிய ஓன்றியத்துடனான நெருக்கமான உறவை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என விரும்பும் முக்கிய அமைச்சர்களையும் திருப்திப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளார்