குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் அர்ஜூன் மகேந்திரன் சார்பில், சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா முன்னிலையாகிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் இலங்கைப் பிரஜை அல்ல எனவும் இதனால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அவரை பலவந்தப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அர்ஜூன் மகேந்திரனை விசாரணைக்கு உட்படுத்தும் சட்த்தரணிகள் அவரது கௌரவத்தை பாதிக்காத வகையில், அவரை இழிபடுத்தாத வகையில் செயற்பட வேண்டுமென கோரியுள்ளார்.
தாம் குற்றமற்றவர் என்பதனை உணர்த்தவும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுமே அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு சாட்சியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.