குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனிய படையினர் பயன்படுத்திய கப்பல் ஒன்று பெல்ஜியம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய படையினர் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே 23 சடலங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. பெல்ஜியத்தின் வடகடல் பகுதியில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
UB-II ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் இன்னும் நல்ல நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.