முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ‘பெல்ட்’ வெடிகுண்டை தயாரிக்க சதி செய்தது பற்றிய ஒரு வழக்கு, உச்ச நீதிமன்றில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன் நேற்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது வழக்குதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கை பிற்பகலில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். எனினும் பிற்பகலில் நீதிபதிகள், வழக்கமான பிற வழக்குகளை கவனித்ததால், இந்த வழக்கை எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது. இதேவேளை மத்திய அரசு சார்பில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒரு அறிக்கை, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்யவந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.