208
யாழ்ப்பாணம் – நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நாவலர் வீதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது, 38 வயதான செல்வநாயகம் ரத்னபாலசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான ரத்னபாலசிங்கம் ரஜீவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love