குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சிவில் சமூகம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் துணை செயலாளர் அன்ட்ரூ க்ளிமோர் ( Andrew Glimor) இதனைத் தெரிவித்துள்ளார். சிவில் சமூக செயற்பட்டாளர்கள் மீது இலங்கையில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பட்டாளர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.