குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் பலர் ஒடுக்குமுறைக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்த போதிலும் இலங்கையில் பலர் குரோத உணர்வுகள் மற்றும் ஒடுக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்குலி ( Una McCauley ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் பலர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னமும் வாய்ப்பு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாகவும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.