குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென இரு இலட்சியத்தை, இலக்கை வகுத்துக்கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள் எனவும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளாh்.
இன்று(21) கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவா்கள் நல்ல பண்புடையவா்களான வளர வேண்டும் என்பதுடன் வளர்க்கப்படவும் வேண்டும். சிறு வயது முதல் இருந்தே பெரியோரை ,பெற்றோரை ஆசிரியரை மதித்து நடக்கவும் சமூகம் மதிக்கதக்க நல் பிள்ளைகளாக வளரவும் வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் எல்லா மாணவா்களிடம் எல்லாத் திறமைகளும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த அவர் குறைகளும் இருக்கும் நிறைகளும் இருக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். எனவே ஆசிரியர்கள் மாணவா்களிடம் காணப்படுகின்ற நிறைகளையும், பலத்தையும் பாராட்ட வேண்டும் எனவும் ஆசிரியர்களின் வாயிலிருந்து முதலில் பாராட்டும் வார்த்தைகளே வரவேண்டும் என்பதுடன் மாணவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அதன் முன்னோடியாக பன்னிரண்டு வலயங்களிலும் உள்ள பாடசாலைகளைகளின் அதிபர்களை வலயம் தோறும் சந்தித்து நிலைமைகளை அறிந்துகொண்டிகிருன்றோம் எனவும் தெரிவித்தார்
பாடசாலை அதிபா் திருமதி பரமேஸ்வரி சோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினா் வை. தவநாதன், கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் மற்றும் அயற்பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியர்கள் பெற்றோh்கள் மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.