தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் அனைத்தும் கொழும்பு மீபேயிலுள்ள அபிவிருத்தி மூலவள நிலையத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (21.09.2017) நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியிலேயே வடமாகாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இப்போட்டியில், தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரதுஷா(முல். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ப.ஹரினி(வவு.இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரும் தரம் 8 ஐ சேர்ந்த கே.கிருசாந்(யாழ். இந்துக் கல்லூரி), கு.தாரங்கா(யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), ஜே.விஷ்ணவி(யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோருமே வட மாகாண கனிஷ்ட பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்படி போட்டியில் பங்கெடுத்து வெற்றியீட்டி கொடுத்துள்ளனர்.
இதே வேளை நாளைய தினமும் ஏனையபிரிவினருக்கான போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப் போட்டிகள் அனைத்தும் மொழிவேறு பாடின்றி 9 மாகாணத்தை சேர்ந்தமாணவர்களுக்கும் ஒன்றாக நடத்தப்படுவதுடன் அனைத்து வினாக்களும் தமிழ், சிங்கள மொழியில் வினாவப்படுவது குறிப்பிடத்தக்கது.