குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதிகாரப் பகிர்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு காட்டவில்லை என போக்குவரத்து அமைச்சரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரம் பகிர்வதனை சுதந்திரக் கட்சி எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையே முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் முறைமை உருவாக்குதல் உள்ளிட்ட சில முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.