குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு ஜே.வி.பி கட்சி பிரதானமாக ஆதரவளிக்கும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில முக்கியமான காரணிகளின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்தல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருதல் ஆகியன இவற்றில் பிரதானமானது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் சமூகப் பொருளாதார கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரத்தில் இருக்கும் தரப்பின் அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள் தற்போதைய அரசியல் சாசனம் 19 தடவைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுலில் உள்ள நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.