குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களை அபிவிருத்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் உதவிகளை வழங்க உள்ளது. இரண்டு மாகாணங்களிலும் வறுமையை ஒழிப்பதற்காக உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 5.4 பில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட உள்ளது. வறிய கிராமிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. கிராமிய மற்றும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அதன் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.