குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணயம் தொடர்பில் கூகுளின் உதவியைப பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் எல்லை நிர்ணயத்திற்காக இணையத்தின் ஊடாக கூகுளின் உதவியை பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இணைய தேடுதள உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தின் கூகுள் மப்ஸ் என்னும் அப்ளிகேசனைப் பயன்படுத்தி எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக்கு அமைய எல்லை நிர்ணயப் பணிகளின் போது கூகுள் மப்ஸின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பணிகளுக்காக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.