வருடந்த தோறும் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்க வழங்கப்படும் முதலமைச்சர் விருது -2017 இடைநிறுத்தப்பட்டு்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மாகாண பண்பாட்டுத்திணைக்களம் கலைஞர்களை அவமானப்படுத்தியு்ளளதாக பல கலைஞர்களும் விசனம் தெரிவித்துள்ளனா்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இடம்பெறுகின்ற மாகாண பண்பாட்டு பெரு விழாவில் மாகாண மட்டத்தில் பல்வேறு கலைத்துறைகளில் சிறப்பாகவும் திறமையாகவும் செயற்பட்டவா்கள் தெரிவு செய்யப்பட்டு அவா்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழமையாகும்.
பிரதேச செயலகங்கள் ஊடாக கலைஞர்கள் தாங்கள் தெரிவு செய்யும் கலைத் துறைகளுக்கு விண்ணம் செய்ய வேண்டும். இதன் போது குறித்த துறையில் தாங்கள் ஆற்றிய பணி, தங்களின் திறமைகள், வெளியீடுகள் என்பவற்றை விண்ணம் மூலம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட கலைஞர்களின் விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட புலமைசார் குழுவினா் தேர்வு செய்து புள்ளியிடல் மூலம் வடக்கு மாகாணத்தின் குறித்த ஆண்டுக்கான முதலமைச்சர் விருது, மற்றும் இளம் கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருது என்பன அறிவிக்கப்படும். இதனடிப்படையிலேயே 2017 ஆம் ஆண்டுக்கான தெரிவு இடம்பெற்று விருது பெறும் கலைஞர்களின் பெயர் விபரங்கள் ஊடங்கள் ஊடாகவும்,தனிப்பட்ட ரீதியிர் கடிதங்கள் மூலமும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நாளை(24) விருது வழங்குவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தீடிரென வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள கலைஞர்களுக்கு தொலைபுசி ஊடாக முதலமைச்சர் விருது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இது கலைஞர்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளதோடு, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தங்களை அவமானப்படுத்தியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனா்.
இளம் கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருதை தவிர ஏனைய கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருது தெரிவில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்தே இ்வவாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடம் தொடர்பில் வட மாகாண கல்வி விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளா் இ.இரவீந்திரன் அவா்களுடன் தொடர்பு கொண்டு வினவிய போது சற்று தாமதித்து பதிலளிப்பதாக தெரிவித்த அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.