173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினியா முஸ்லிம்களுக்கு இலங்கையில் புகலிடம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டிலிருந்தும் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் எதனையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சட்ட திட்டங்களை பூர்த்தி செய்வதன் மூலம் எந்தவொரு நாட்டினதும் பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், புகலிடம் வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love