148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். ஜனாதிபதியை தனித் தனியாக சந்தித்து பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க உள்ளதாக அறிவிக்க உள்ளனர். சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிமால் லச்னா, டீ.பி. ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியை சந்தித்து ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ள உள்ளதாக தெரிவிக்க உள்ளனர்.
Spread the love