179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான சகல வழிகளிலும் முயற்சிகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சியை பிளவடையச் செய்ய சில தரப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பாதுகாப்பதற்காக, முடிந்தளவு முயற்சிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love