குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரும் இராணுவப் படையினரிடம் சரணடையவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் பற்றி இராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ மேஜர் ஜெனரல் சானக குணவர்தன இது பற்றி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எழிலன் அரசாங்கப் படையினரிடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ளார். எழிலன் படையினரிடம் சரணடையவோ அல்லது அவரை படையினர் கைது செய்யவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு நீதிமன்றில் எழிலன் காணாமல் போன வழக்கு தொடர்பிலான விசாரணைகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழிலனின் மனைவியும் வட மாகாண சபை அமைச்சருமான ஆனந்தி சசிதரன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.