பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பெயரை பத்மபூஷண் விருதுக்காக இந்திய மத்திய அரசிடம் மத்திய விளையாட்டு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உலக சம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை வெண்கலம் பெற்ற சிந்து, கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.
சீனா ஓபன் சீரிஸ் ப்ரிமியர், இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ், கொரியா ஓபன் சீரிஸ் ஆகியவற்றிலும் சிந்து வெற்றி பெற்ற வீராங்கனையாக திகழ்கின்றார். இதனைவிட கொமன்வெல்த் விளையாட்டுகள், உபர் கப், ஆசியன் சம்பின்ஷிப், உள்ளிட்டவற்றிவும் 4 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ள சிந்து கடந்த ஏப்ரலில் வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவரது பெயர் பத்மபூஷண் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் கடந்த 2015ம் ஆண்டு சிந்துவுக்கு வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.