219
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கிலோ மீட்டர் தொலைவில் பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love