இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி அருகே இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதுடன்   அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த  பகுதியில் இன்று காலை ராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது    ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ள ஒரு தீவிரவாதியை அவதானித்த  ராணுவத்தினர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேர சண்டைக்கு பின்னர் அந்த தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்த ஆயுதங்ராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply