மத சார்பற்ற நாடாக இலங்கையை பிரகடனம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையை மத சார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி இருந்தது. எனினும் இந்தக் கோரிக்கைய ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் திகாம்பரம், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தகளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்படுவதே மதிநுட்பமான தீர்மானமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.