உலகம்

வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் தடை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்தத் தடையை அறிவித்துள்ளார். வடகொரியா, ச்சாட், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளின் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான், லிபியா, யேமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் பிரஜைகளும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்களினால் இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களின் நலன்களையும் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply