165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக இலங்கை சிற்றுண்டுச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட வேண்டும் எனவும், உணவுப் பொதிகள் அத்தியாவசிய பொருட்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பொதிகள் தொடர்பில் தர நிர்ணயங்கள் அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love