Home உலகம்பலஸ்தீனியர் நடத்திய தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் பலி

பலஸ்தீனியர் நடத்திய தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பலஸ்தீன துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக் கரையின் ஹார் டார் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான இந்த குறித்த துப்பாக்கிதாரியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பலஸ்தீனர்கள் தூண்டியதனால் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் மத்திய கிழக்குப் பிரதிநிதி ஜேசன் கிறீன்பெல்ட், இஸ்ரேல் – பலஸ்தீன சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஜெருசேலம் பயணம் செய்துள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த 2014ம் ஆண்டில் முறிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More