இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ. தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதாகிவிட்டதாகவும் கூட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் பக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த அலுவலகம், சர்வதேசத்தின் நம்பிக்கையை பெறத் தவறியுள்ளதாகவும் நிமல்கா தெரிவித்துள்ளார்.