குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்க்ககரமான முன்னோக்கிய நகர்வுகள் இடம்பெற்றுள்ளன என பிரித்தானியாவின் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான விவகாரங்களிற்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள பிரதான அதிகாரி மைக்கல் பார்னியருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரஜைகள் உரிமைகள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, என்றாலும் கருத்துவேறுபாடுகள் உள்ளன என டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
நிரந்தர வதிவிடத்திற்கான ஆவணங்களை வைத்துள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் அதற்காக மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் ஏனையவர்கள் பிரித்தானியாவின் நீதிமன்றங்களில் தங்கள் உரிமைகளை உறுதிசெய்ய முயலலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளின் கவலைகளை போக்குவதற்கான அடித்தளங்களை இட்டுள்ளோம் எனவும் விவாகரத்திற்கான கொடுப்பனவு குறி;த்த பேச்சுக்களிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.